• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வேலுநாச்சியாரின் ஊர்திக்கு விருதுநகரில் வரவேற்பு!

Byமகா

Feb 7, 2022

குடியரசு தின விழாவில் இடம்பெற்ற வீரமங்கை வேலுநாச்சியாரின் அலங்கார ஊர்தி பொதுமக்களின் பார்வைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று வருகிறது. இதில் திருநெல்வேலி, கோவில்பட்டி சென்று தேனி செல்லும் வழியில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டியில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று கொண்டு வரப்பட்டது.

சடையம்பட்டியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாகனத்தை மலர்தூவி வரவேற்றனர்.

இதையடுத்து விருதுநகர் மாவட்ட எல்லை பகுதியான சடையம்பட்டி,சாத்தூர் பைபாஸ் சாலை, வெங்கடாசலபுரம் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ,மாணவிகள் பொதுமக்கள் பார்வைக்காக சென்றது. இதையடுத்து ஆர்.ஆர்.நகர் வழியாக விருதுநகர் கொண்டு செல்லப்பட்டது. இதில் சாத்தூர் பகுதிகளை சேர்ந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் மலர்தூவி பார்த்து ரசித்தனர். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்…