• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சேத்தூர் மாரியம்மன் கோவில் கொடியேற்றம்..,

ByRadhakrishnan Thangaraj

Mar 21, 2026

இராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன் கோயில் பங்குனி பூங்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் திருக்கோயில் பங்குனி மாத பூக்குழி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்கு கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

பின்னர் மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அதை தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி திருவிழா(29.03.2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை மேட்டுப்பட்டி மாரியம்மன் தலைவர் கணேசன், செயலாளர் காந்தி நாயக்கர் பொருளாளர் முத்துக்குமார் மற்றும் பூசாரி தில்லை அம்பலம் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.