• Thu. Mar 27th, 2025

ஆண்டிபட்டியில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,

ByI.Sekar

Feb 26, 2024

ரூபாய் 41 கோடி மதிப்பீட்டில் ரயில்வே பணிகள், பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிப்பு.

அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் இந்திய நாட்டில் 41 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 554 ரயில் நிலையங்கள் மேம்படுத்துதல் மற்றும் 1500 சாலை மேம்பாலம் மற்றும் அடிப்பாலம் ஆகிய இடங்கள் முடிவடைந்து நாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்யும் நிகழ்ச்சியை காணொளி காட்சியின் மூலம் பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் .

இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தென்னக ரயில்வே சார்பாக பல இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் ஆண்டிபட்டி அருகே மேக்கிழார் பட்டி சாலையில், லிட்டில் பிளவர் பள்ளி அருகே நடந்த நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா பொன்னுதுரை தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ஆ. ராமசாமி மற்றும் பேரூராட்சி துணை சேர்மன் ஜோதிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கணேசன், ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி தலைவர் மீனாட்சி சுந்தரம், தென்னக ரயில்வேயின் துறை சார்ந்த ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். விழாவில் முக்கிய நிகழ்வாக திட்டத்தை வரவேற்று லிட்டில் பிளவர் பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் மற்றும் முதல்வர் உமா மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தென்னக ரயில்வே அலுவலர் வினோத் குமார் நன்றி கூறினார்.