

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் தவச்செல்வம் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் அய்யனன், நிர்வாகிகள் ரவிக்குமார், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மதுரை கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் பழைய தீயணைப்பு நிலைய முன்பாக ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு அங்கு கட்சியினர் சார்பாக தேங்காய் பழம் வைத்து பூஜை செய்து பொது மக்களுக்கு கட்சியின் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

