• Sun. Nov 10th, 2024

சமையல் எரிவாயு சிலிண்டரின் எடை குறைப்பு…

Byகாயத்ரி

Dec 8, 2021

சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையை குறைக்க அரசு முடிவு செய்திருப்பதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.


14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர்களை கொண்டு செல்வதில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களை மனதில் கொண்டு, அதன் எடையைக் குறைக்க பல்வேறு வழிகளை அரசு பரிசீலித்து வருகிறது.சிலிண்டரின் எடை குறைவாக இருந்தால் பெண்கள் கையாள்வது எளிதாக இருக்கும். எனவே, விரைவில் பெண்களின் வசதிக்காக அரசு எல்பிஜி சிலிண்டர்களின் எடையைக் குறைக்கலாம் என்றும் எடை குறைந்தால், விலையும் குறையும் என்று கூறப்படுகிறது.


எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் ஒருவர் கடந்த வாரம் கால் தடுமாறி விழுந்தபோது, அவர் மீது சிலிண்டர் விழுந்ததில் அவர் உயிரிழந்தார். எனவே தான் இந்த முடிவு மத்திய அரசு எடுத்துள்ளது.எடை அதிகமுள்ள சிலிண்டர்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,சிலிண்டர்களை பெண்கள் கையாள்வதை சுலபமாக்க, அதன் எடையை குறைக்க பரிசீலித்து வருகிறோம் என தெரிவித்தார். 14.5 கிலோ எடையை 5 கிலோ வரை குறைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *