• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கோவை பழக்கடையில் எடை மோசடி..,

BySeenu

Aug 1, 2025

கோவை, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே உள்ள பழக்கடையில் ஏற்பட்ட எடை மோசடி சம்பவம், பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர், இவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இன்று காலை உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க சென்று இருந்தார். காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் சந்தையின் அருகே மினிடோரில் ஆட்டோவில் ஆப்பிள் விற்பனை செய்து கொண்டு இருந்தனர்.

அதில் இருந்து 2 கிலோ ஆப்பிள் வாங்கியதை உள்ளார். குறைவான ஆப்பில் இருந்ததை கண்டு, அருகில் இருந்த மற்றொரு கடையில் எடையை சோதித்த போது, அது 1,800 கிராம் மட்டுமே இருந்தது.

அதன் பின், அவர் மீண்டும் பழம் வாங்கிய கடைக்குச் சென்று எடை மீளச் சோதனை செய்த போது, அங்கு எடை இயந்திரம் 2 கிலோ என்று காண்பித்தது.

எப்படி இந்த வேறுபாடு? என்று கேட்டதற்குப் பதிலாக, கடை தொழிலாளி ஒருவர் எடை இயந்திரத்தில் ஒரு பட்டனை அழுத்தினார்.

அப்பொழுது எடை 1,855 என்ற அளவை காட்டியது.

இதனால், ஒரு கிலோவுக்கு 100 கிராம் குறைத்தும், 2 கிலோவுக்கு 200 கிராம் குறைத்தும் பழங்களை விற்பனை செய்து மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த கடை ஊழியரிடம் கேள்வி எழுப்பியபோது,

யார்கிட்ட வேண்டுமானாலும் கம்ப்ளைன்ட் பண்ணு போலீஸ்காரங்க டெய்லி வந்து வாங்கிட்டு போறாங்க எல்லாத்துக்கும் தெரியும் .. என்று வாக்குவாதம் செய்து உள்ளார்.

இதுபோன்ற எடை மோசடிகள், சந்தை மற்றும் ரோடு ஓர கடைகளில் அதிகரித்து வருவது பொதுமக்கள் நம்பிக்கையை சிதைக்கும் நிலைக்கு சென்று உள்ளது.

நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டியதோடு, வணிகக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதுபோன்ற மோசடிகளுக்கு கட்டுப்படுத்த ஆய்வுகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து நடைபெறும் மோசடிகளை தடுக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.