இந்து முன்னணி தமிழகம், தமிழக அரசையும், அறநிலை துறை அமைச்சரையும் கண்டித்து மாபெரும் பிரச்சாரம் நடத்திவருகிறது.
இன்று சேலம் மாநகரில் உள்ள கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் முன்பு பக்தர்களுக்கு தமிழக அரசு அறநிலை துறை அமைச்சர் கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக போட்ட நகைகளை உருக்குவது குறித்து மக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்து மாரியம்மனை தரிசித்து சென்றனர்.

இதை எதிர்த்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ஊர்வலமாக உடம்பில் பிளக்ஸ் பேனர் மாட்டிக்கொண்டு கோவிலுக்கு வந்தனர். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பல வருடங்களாக கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நகைகளை ஏதும் செய்யாமல் அப்படியே இருந்து வந்தது. ஆனால் தற்போது அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், ஏதோ ஒரு எண்ணத்தை மனதில் வைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்க அறிக்கை விடுகிறார். இதை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் பேசினார்.
