• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

50 சதவீதம் அடிச்சி தூக்கிட்டோம்.. திமுக அமைச்சர் பெருமிதம்!

தமிழகத்தில் 50% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் பெருமிதம்.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 750 மையங்களில், 43,000 பேருக்கு தடுப்பூசி போட இழக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் தொடங்கிவைத்தார். இதில் கலந்துகொண்டு அமைச்சர் பேசும் போது தமிழகத்தில் ஆரம்ப காலகட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருந்தது. தமிழக முதல்வரின் சீரிய நடவடிக்கையால் இன்று படிபடியாக குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வரின் முயற்சியால் மத்திய அரசிடம் பேசி தமிழகத்துக்கு தடுப்பூசிகள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டு இன்று 50%க்கு மேல் தடுப்பூசிகள் போடப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.