மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பாம்பு கடித்து உயிரிழந்த விவசாயத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ.1,02,500/- நிவாரணத் தொகைக்கான ஆணையை வழங்கினார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், தென்கரை முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி திருமதி க.பஞ்சு அவர்கள் கடந்த 23.12.2025 அன்று பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து, அவரது கணவர் திரு. சி. கண்ணன் அவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பொதுப்பிரிவினருக்கான விபத்து மரண நிவாரணத் தொகை மற்றும் ஈமச்சடங்கு செலவிற்கான நிவாரணத் தொகை என மொத்தம் ரூ.1,02,500/- வழங்குவதற்கான வழங்கினார்.




