ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் தொழுகை முடிந்து வெளியே வருவோருக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கோவையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனிடையே பல் சமய நல்லுறவு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அனைத்து பள்ளிவாசல்கள் முன்பாகவும் தொழுகை முடித்து வெளியே வருவோருக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
பல் சமய நல்லுறவு இயக்க தலைவரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினருமான முகமது ரஃபிக் தலைமையில் அவ்வமைப்பினர் இரண்டு வாகனங்கள் மூலம் கவுண்டம்பாளையம், சாய் பாபா காலனி, பூ மார்க்கெட், உக்கடம், ஆத்துப்பாலம் என பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோருக்கு நீர்மோர் வழங்கினர்.