• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுகோள்…

பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவாடானை அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் திருவாடனை வந்து துணிகள் மற்றும் மளிகை பொருட்கள் மற்ற பொருட்கள் வாங்க வரவேண்டும். பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள். ஏற்கனவே நான்கு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தற்போது கண்காணிக்கப்பட உள்ளது. அதேபோல் சின்னகீரமங்கலம் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவும் செயல்படாமல் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அச்சங்குடியில் ஏற்ப்பட்ட விபத்தில மூதாட்டி பலியாக நிலையில் இதுவரை எந்த வாகனம் என்பது தெரியவில்லை.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கூட்டம் அதிகரிக்க வாய்பு உள்ளது. எனவே நான்கு ரோடு சந்திப்பு சாலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சின்ன கீரமங்கலத்தில் இயங்காமல் உள்ள கேமராக்களை இயக்க நடவடிக்கை வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.