• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு..!

Byவிஷா

Dec 6, 2023

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட பாசனப் பகுதி நிலங்களுக்கு, முதற்கட்டமாக 1500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணையின் பிரதான ஏழு மதகுகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.