• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

குடிநீர் குழாய் உடைந்து சீரமைக்காததால் வீணாகும் குடிநீர்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் – எரியோடு சாலையில் வரப்பட்டி பிரிது முதல் பூத்தாம்பட்டி வரை தாடிக்கொம்புக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் நேற்று குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இரண்டாவது நாளாக ஆன நிலையில் உடைந்த குழாயை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் ஏனோ சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் குடிநீர் சாலை ஓரத்தில் உள்ள பூத்தாம்பட்டி மயானத்துக்குள் வீணாக சென்று வருகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் கடுமையான குடியே தட்டுப்பாடு உள்ள நேரத்தில் பணியாளர்களின் அலட்சிய போக்கால் மயானத்துக்குள் குடிநீர் வீணாகச் சென்று வருவதை பொதுமக்கள் வருத்தத்தோடு பார்த்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.