• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே மாநகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்

ByN.Ravi

Jun 10, 2024

மதுரை சோழவந்தான் அருகே, தச்சம்பத்து சாலையில் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது.
ஏற்கனவே, இந்த பகுதியில் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய்களை பதிப்பதற்காக சாலையின் நடுவே தோன்டிய பள்ளங்களை சரியாக மூடப்படாமல் சென்று விட்டதால், சாலையில் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில், இந்த சாலை இருந்து வருகிறது .
சிறிது மழை பெய்தாலே மழைநீர் குளம் போல் தேங்கியும், சேரும் சகதியுமாக மாறியும் வாகன போட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அவனியாபுரம், மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த ஒரு வாரமாக சாலையின் நடுவே, குடிநீர் ஆள் உயரத்திற்கு வீறிட்டு எழுந்து சாலை நடுவே விழுந்து செல்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும், அருகில் தச்சம்பத்து சுகாதார வளாகம் உள்ளதால் அதன் கழிவுநீரும் இந்த குடிநீரில் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உடைப்பை சரி செய்து வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.