• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி – மஞ்சூர் பகுதியில் பாலத்தில் இருந்து ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த தூதுர்மட்டம் தூரி பாலம் பகுதியில் பாலத்தின் அடியில் ஆற்றின் மீது கொட்டப்படும் கோழி கழிவுகள் குப்பைகளால் ஆறுகள் அசத்தமடைந்து வருகின்றன.


மஞ்சூர் பகுதி ஆறுகளில் தண்ணீர் செல்லும் பகுதிகளில் மரம் செடி கொடிகள் வளர்ந்தும் கழிவுகள் பாலத்தின் அடியில் கொட்டப்படுவதால் தண்ணீரில் அடித்து சென்று ஒவ்வொரு கிளைகளிலும் பிளாஸ்டிக் இதர கழிவுகள் மாட்டிக்கொள்கின்றன. அதிக அளவில் கொட்டப்படும் கழிவுகளால் கடுமையான துர்நாற்றமும் வீசி வருகின்றது கழிவுகளை உண்பதற்காக. வனவிலங்குகளும் காட்டுப் பன்றிகளும் காகங்களும் ஆறுக்குள் இறங்கி மேலும் அசுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது இந்த ஆற்றில் வரும் நீர் கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவதால் குப்பைகளை கொட்டுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஆற்றங்கரையில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி சுத்தப்படுத்தப்பட வேண்டும் என ஆறு பாதுகாப்பு நல சங்க ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்