• Sat. Apr 27th, 2024

*ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு பரப்பியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டரா விஜய் நல்லதம்பி *

கழகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் விலைவித்தாக விஜய் நல்லதம்பி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கே.டி.ராஜேந்திர பாலாஜியின் நண்பரும், வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் விஜய்நல்லதம்பி 30லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து விஜய்நல்லதம்பி, கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், நான் பலரிடம் பெற்ற பணத்தை ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்தேன். ஆனால் அவர் திருப்பி தரவில்லை என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், என்மீது ஆதாரமற்ற புகார் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளானர். இதில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாடுகளை மீறி கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் செயல்பட்டதால், விருதுநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த R.K. விஜய் நல்லதம்பி கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *