ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வேளாண் குடியில் 4 தலைமுறைகளை கண்ட 132 வயது மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார்.
வேளாண் குடியைச் சேர்ந்தவர் சந்தனமாய் இவரது கணவர் ஆரோக்கியசாமி அதே கிராமத்தில் தோட்ட காவலாளியாக வேலை பார்த்தார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆரோக்கியசாமி கடந்த 1982 இல் இறந்தார். மகனுடன் அதே வீட்டில் சந்தனம்மாள் வசித்து வந்தார். அவருக்கு 10 பிள்ளைகள், பேரன் பேத்தி 25, கொள்ளு பேரன் பேத்தி 50
பூட்டி 2, தற்போது உள்ளார்கள்.
சந்தனம்மாள் உடலுக்கு கொடி பங்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பலர் மலர் அஞ்சலி செலுத்தி பிறகு அவரது உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது வயது குறித்து வட்டாட்சியர் அலுவலகம் வாயிலாக உறுதிப்படுத்த கேட்டபோது அதற்கான ஆவணங்களை பரிசீலித்து வருவதாக சொல்லப்பட்டது. அந்த கிராம மக்கள் 132 வயது சந்தனம்மாளுக்கு பிறப்பு இறப்பு தேதி குறிப்பிட்டு பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.