கோவை அடுத்த கண்ணம்பாளையத்தில் தனியார் நிறுவனத்துக்குள் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூலூர் பைபாஸ் சாலை அருகே குத்துக்காட்டு தோட்டத்துக்குள் இருந்த ஆட்டை மர்ம விலங்கு கடித்துக் கொன்று காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டது. அதைப் பார்த்து ஆட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவலின் பெயரில் சூலூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து விசாரித்தனர். இதை அடுத்து மதுக்கரை வனத்துறையினர் வந்து அங்கு பதிவான விலங்குகளின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். இதில் ஆட்டை கடித்தது சிறுத்தையா ? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது.

இதை அடுத்து ஆட்டை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு புகுந்த தோட்டத்துக்குள் இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட்டு உள்ளன.
அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.





