• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆர்கே செல்வமணிக்கு எதிராக வாரண்ட்!

தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஆர்கே செல்வமணி. சிறிது காலங்கள் படங்களை இயக்காமல் உள்ளார். இருந்தபோதிலும் இயக்குநர் சங்க தேர்தலில் தனது அணியை மீண்டும் வெற்றி பெற செய்துள்ளார். இந்நிலையில் அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஆர்கே செல்வமணிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2016ல் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆர்கே செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு ஆகியோர் பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார். போத்ரா இறந்த பின்னர், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும்நிலையில் ஆர்கே செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்கள் இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வரக்கூடிய வாரண்டை பிறப்பித்த நீதிபதி, விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.