• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வான்கடே டெஸ்ட் கிரிக்கெட்- 62 ரன்களுக்குள் நியூஸிலாந்தை சுருட்டியது இந்தியா

Byமதி

Dec 4, 2021

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாளான இன்று காலை ஆட்டம் தொடர்ந்த நிலையில்
இந்திய அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 325 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் மும்பையை பூர்வீகமாக கொண்ட நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து வீரர்கள் ஆரம்பம் முதலே இந்திய வீரர்களின் சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 28.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூஸிலாந்து அணி 62 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜேமிசன் 17 ரன்களும், லாதம் 10 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர்.

இந்தியா தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார். சிராஜ் 3 விக்கெட்டுகளும், அக்ஸர் படேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து நியூஸிலாந்து பாலோ ஆன் ஆனது. ஆனாலும், பாலோ ஆன் கொடுக்காத இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.