• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

விஜய்-யின் அழைப்புக்காக காத்திருக்கிறேன் – அல்போன்ஸ் புத்திரன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், விஜய். தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

இந்நிலையில், தமிழில் ‘நேரம்’ படத்தையும், மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தையும் இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் விஜய்யை வைத்து படம் இயக்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அல்போன்ஸ் புத்திரன் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்துகொண்டிருந்தார் . அப்போது ரசிகர் ஒருவர் விஜய்யின் படத்தை எப்போது இயக்குவீர்கள் என்ற கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன் “பிரேமம் படம் வெளியான போது முதல் பாராட்டே விஜய் சாரிடம் இருந்துதான் வந்தது. அதன்பிறகு தனிப்பட்ட முறையில் ஒருமுறை விஜய்யை சந்தித்தேன். நிச்சயம் ஒருநாள் என்னை படம் இயக்க அழைப்பார் என்று நம்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.