• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பேரூராட்சியில் வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பாக வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம், உறுதிமொழி,கோலம் வரையப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். இதில் தலைமை எழுத்தர் தனலட்சுமி, இளநிலை உதவியாளர் கார்த்திக் சுகாதார பணி மேற்பார்வையாளர் சுரேஷ் உட்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.