• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ByG.Suresh

Apr 18, 2024

பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற இலக்கினை நோக்கி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு,
நேரு யுவகேந்திரா,மூவேந்தர் சிலம்பம் மற்றும் தமிழரின் பாரம்பரிய வளர்ச்சி கழகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற இலக்கினை நோக்கி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு நேரு யுவகேந்திரா, மூவேந்தர் சிலம்பம் மற்றும் தமிழரின் பாரம்பரிய வளர்ச்சி கழகம் சார்பில் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சமுதாய கூடம் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்திற்கு பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ ஒரே கட்டமாக தேர்தல் நடத்திடும் பொருட்டு, வருகின்ற ஏப்ரல்-19ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்களது வாக்கினை பதிவு செய்திடும் பொருட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் நேரு யுவகேந்திரா சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சமுதாய கூடம் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில், மாணவ மாணவியர்கள் பங்குபெற்ற கராத்தே, யோகா, சிலம்பம், மல்லர் கம்பம், கயிறு ஏறுதல் போன்ற பல்வேறு வீர விளையாட்டுகளுடன், வாக்காளர்களாகிய பொதுமக்களை ஈர்க்கின்ற வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதுபோன்று, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை அனைத்து வாக்காளர்களும் கருத்தில் கொண்டு, வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ல் 100சதவீதம் வாக்களித்து, நமக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்புக்களை உணர்ந்து, தங்களது வாக்குரிமையை நிலைநாட்டி, ஜனநாயக கடமையாற்றிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சபீதாள் பேகம், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், சிவம் தற்காப்பு கலை கழகத்தலைவர் பரமசிவம், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.