• Wed. May 1st, 2024

ஆண்டிபட்டி முதல் அமெரிக்கா வரை பலாப்பழ சின்னம்: உற்சாகத்தில் ஓபிஎஸ் தரப்பு

ByBala

Apr 18, 2024

இராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் சின்னம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரிய கட்டிடங்களில் அங்குள்ள தமிழர்களால் ஒளிர செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் நாளை ஏப்ரல்-19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தமிழகத்தில் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நேரத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் திமுக- அதிமுக- பாஜக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வந்தது. அதிமுக-வை மீட்க ஒண்றினைய வேண்டும் என முன்னாள் முதலமைச்ச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக ராமநாதபுரம் தொகுதியிள் போட்டியுடுகிறார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கவும், முன்னாள் முதலமைச்சர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 2-2019ம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், அயல் நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக அமெரிக்கா வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுத்து தமிழர்களின் உரிமையை காத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜல்லிகட்டை மீட்க அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்ட தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு உலகத்தமிழர்கள் சார்பாக நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்வதாக
அமெரிக்கவாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள பெரிய கட்டடங்களில் இந்திய பிரதமர் மோடியை பற்றியும்,இராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து விளம்பர காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
இதனைதொடர்ந்து பலாப்பழம் சின்னம் பொறிக்கப்பட்டுள்ள டி-சர்ட்டுகளை அணிந்து ஓபிஎஸ் அவர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். அமெரிக்கா வரை ஓபிஎஸ் அவர்களின் சின்னம் சென்றுள்ளது ஓபிஎஸ் தரப்பை உற்சாகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *