• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாகிஸ்தான் தீவிரவாதிகளை கண்டித்து ஆண்டிபட்டியில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் சார்பாக ஆர்ப்பாட்டம்!..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து இந்துக்களை குறிவைத்து கடந்த சில நாட்களாக 7 இந்துக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 2 ஆசிரியர்கள் உள்பட பலர் இறந்துள்ளனர்.

இந்த கொடும் செயலை கண்டித்து, இந்தியா முழுவதும் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பின் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் சிலை அருகில் பஜ்ரங்தள் ஒன்றிய அமைப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது பாகிஸ்தான் கொடியினை அமைப்பினர் எரிக்க முயன்றனர். இதனையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் கொடியை எரிக்காதவாறு பறித்துச் சென்றனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் கண்ணாயிரம், மாவட்ட துணைச் செயலாளர் ஜெய பிரகாஷ், மாத்ரு சக்தி மாவட்ட அமைப்பாளர் செல்வி, பஜ்ரங்தள் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.