• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விஷ்ணு விஷாலின் தந்தையிடம் போலீசார் விசாரணை!

காமெடி நடிகர் சூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அடையாறு காவல் நிலையத்தில் மோசடி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், சிறுசேரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் டிஜிபியும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் 2.70 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புகாரில் தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா முன்பு விசாரணையில் இருந்து வரும் நிலையில், இந்த விசாரணை தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன் நடிகர் சூரி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகிஇருந்தார்.

இதனையடுத்து தற்பொழுது முன்னாள் டிஜிபியும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு சம்மன் கொடுத்து அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.