• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

விருமன் ஜாதிப்படமா சமூகப்படமா?

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கும் ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி பகுதிகளில் நடைபெற்று வந்தது முடிவுக்கு வந்திருக்கிறது

தமிழ் திரைப்பட தயாரிப்பில் வெற்றிதோல்விகளை பற்றி யோசிக்காமல் தரமான படைப்புகளை தயாரித்து வெளியிட்டு வருகிறது நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான ‘கடைக்குட்டி சிங்க’த்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி மதுரையில் ஆரம்பமானது.

மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று டிசம்பர் 21-ம் தேதி முடிவடைந்தது.இதைப் பற்றி நடிகர் கார்த்தி சொல்லும்போது, “நீண்ட நாட்களுக்குப் பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷப்பட்டேன். மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாள்கள் படபிடிப்பை நடத்தி உள்ளார்கள் இயக்குநர் முத்தையாவும் , ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும்.என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எதார்த்தமானவர். அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை. மீண்டும் இப்படம் மூலம் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைவதில் சந்தோஷம். 2D நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் சூர்யாவுக்கும் நன்றிகள்..“ என்றார்.


இது குறித்து படத்தின் நாயகியான அதிதி சங்கர் கூறியிருப்பதாவது என்னுடைய ஒரு கனவு நிறைவேறிய உணர்வை இந்தப் படப்பிடிப்பு தந்துள்ளது. விருமன் படக் குழுவினர் அனைவரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். இவர்களை நிஜமாகவே நான் இப்போது மிஸ் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: S.K.செல்வகுமார் ஸ்டண்ட்:அனல் அரசு கலை இயக்கம் – ஜாக்கி, படத் தொகுப்பு – வெங்கட் ராஜ், நடன இயக்கம் – ஷோபி, பாபா பாஸ்கர், ராதிகா, ஜானி, இணை தயாரிப்பு – ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்.


பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க.. வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும்கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாகவும், ஜாதிய குறியீடுகளுடன் இருக்கும் ஜாதியை முன்னிலைப்படுத்தும் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகியிருக்கிறாரா என்பதை விமர்சகர்களும், பொதுவான ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


தனது முதல் படத்திலேயே கனமான கதா பாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர். அறிமுக நாயகியான அதிதி ஷங்கர் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடித்துள்ளார் என்று மொத்தப் படப்பிடிப்பு குழுவும் சொல்கிறது.


இந்த ‘விருமன்’ திரைப்படம் 2022-ம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.