• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகேதச்சம்பத்து கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா..!

ByKalamegam Viswanathan

Sep 20, 2023

சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது முதல் நாள் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். அன்று மாலை உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் செயலாளர் சுவாமி பரமானந்த சுவாமி பக்தி சொற்பொழிவாற்றினார். இரண்டாம் நாள் விநாயகருக்கு மஞ்சள் அபிஷேகம் கோமாதா பூஜை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது. இவ்விழாவினை ஊராட்சி மன்ற தலைவர்கள் தேனூர் வி.டி பாலு திருவேடகம் பழனியம்மாள் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூன்றாம் நாள் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி புறநகர் மாவட்ட தலைவர் குருஜி ராமச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் மாவட்டச் செயலாளர் ரமேஷ் ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி ஒன்றிய துணைத் தலைவர் ராஜா நிர்வாகிகள் தனசேகரன் பொன்னையா சுரேஷ்குமார் பாபு காசி சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தேனூர் கவுன்சிலர்கள் சவுத்ரி நல்லமணி திருவேடகம் கவுன்சிலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலை ஊர்வலம் கிராமத்தில் வலம் வந்தது வழிநேடுக விநாயகருக்கு அபிஷேகம் செய்து விநாயகரை வணங்கினர். விழா ஏற்பாடுகளை தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் இந்து முன்னணி மற்றும் விநாயகர் கமிட்டி குழுவினர் செய்திருந்தனர். சமயநல்லூர் ஏட்டு சிவபாலன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.