புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்,பத்தாண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும், 20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெயர் மாற்றம் செய்ய வேண்டும், டி எஸ் எல் ஆர் பட்டா மாறுதல் பரிந்துரை பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை கண்டித்தும்,பொன்னமராவதி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்நிகழ்விற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார. வட்டச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.பொருளாளர் பிரேமலதா நன்றியுரை ஆற்றினார்.சிறப்பு அழைப்பாளராக மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் பாண்டியன் மாவட்ட துணைசெயலாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.