திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கே.அய்யம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி.
அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவர் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி கிராம நிர்வாக அலுவலர் ரேவதியை நாடி உள்ளார். சான்றிதழ் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து கதிர்வேல் திருப்பூர் மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இன்று ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கதிர்வேல் கிராம நிர்வாக அலுவலர் ரேவதியிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரேவதியை கைது செய்தனர்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர் சசி லேகா ஆகியோர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து ரேவதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.