• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ மறைவு

Byவிஷா

Apr 6, 2024

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ திடீர் மரணமடைந்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார்.
முன்னதாக நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்த திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மயங்கி விழுந்த நிலையில், அரசு மாருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஏற்கெனவே கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.எல்.ஏ. புகழேந்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற தகவல் இன்று காலை வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி புகழேந்தி காலமானார்.