• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விக்ரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி நடித்துவரும் திரைப்படம் விக்ரம். மேலும், இந்த படத்தில் பகத் பாசில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

தற்போது இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. விக்ரம் படத்தில் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் இருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் உருவாகி வரும் விக்ரம் படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.