• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரீலிசுக்கு ரெடியாகும் விக்ரம்

Byமதி

Nov 22, 2021

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் விக்ரம். விஜய் சேதுபதி, பஹத்பாசில், காளிதாஸ் ஜெயராம், சம்பத் ராம், மைனா நந்தினி, ஷிவானி நாராயணன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது கோவையில் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. டிசம்பருக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளது. அதன்பின் மற்ற பணிகளை துவக்கி மார்ச் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.