• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓடிடி தளத்தில் ‘விக்ரம்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

ByA.Tamilselvan

Jun 21, 2022

விக்ரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் லோபடஜெட் படங்கள் மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியாகும்.வெற்றிகரமாக ஓடிக்கொண்டருக்கும் விக்ரம் படம் வசூலை குவித்து வரும் நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் 3 வாரங்களைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் 350 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் 500 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் 8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஓடிடி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி படம் வெளியான 28 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்படும். ‘விக்ரம்’ படத்திற்கு கிடைத்த வாரம் தள்ளி ஜூலை 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
திரையரங்குகளில், மக்களின் ஆதரவு கிடைத்து வரும் நிலையில் அதற்குள் ஓடிடியில் வெளியாகவிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.