• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் விக்ரம் இசைவெளியீட்டு விழா!

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படம் “விக்ரம்”. படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, பிரமாண்டமாக வரும் மே மாதம் 15ம் தேதிக்குள் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். மேலும், நிகழ்ச்சியை காண ரசிகர்களுக்கும் அனுமதி அளிக்கப்படவுள்ளதாம். ரசிகர்களுடன் ஆர்ஆர்ஆர் படத்தின் விழா போல பிரமாண்டமாக நடைபெறும் என தெரிகிறது.