• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னை குறிஞ்சி இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, விஜய்வசந்த் MP நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்

தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை பசுமை சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நேரில் சந்தித்து. நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை காலத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு நேரில் வந்து தனது வெற்றிக்கான பரப்புரை மேற்கொண்டு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தொடர் வெற்றிக்கு உதவி செய்ததற்கு விஜய் வசந்த் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய்வசந்திற்கு பொன்னாடை அணிவித்து விஜய் வசந்தின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எஸ்.காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.