நடிகர் விஜய் நடிக்கும் 68 வது படத்தின் பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட் படமாக தயாராகவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி12அன்றுபொங்கல் திருநாளையொட்டி வெளியாகவிருக்கிறது.இதற்கடுத்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் விஜய்.அது விஜய்யின் 67 ஆவது படம்.அந்தப்படத்தின் படப்பிடிப்பு 2023 ஜனவரி முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறது.67 ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் 68 ஆவது படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டன.விஜய்யின் 68 ஆவது படத்தை அட்லி இயக்குகிறார் என்றும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.இப்போது அதில் ஒருபாதி மட்டும் உண்மையாகியிருக்கிறது. விஜய்யின் 68 ஆவது படத்தை அட்லி இயக்குகிறார் என்பது மட்டும் உண்மையாகியுள்ளது.அந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்று முடிவாகியிருக்கிறதாம்.
ஆம், விஜய்யின் 68 ஆவது படத்தை அட்லி இயக்குகிறார் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.அதைவிட முக்கியமான தகவல், இந்தப்படத்துக்கான மொத்த செலவுத்தொகை என்று உத்தேசமாகக் கணக்கிடப்பட்டிருக்கும் தொகை 400 கோடி என்கிறார்கள்.விஜய் மற்றும் அட்லி ஆகியோர் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் சம்பளம் சுமார் 150 கோடி என்றால் படத்துக்கு 250 கோடி செலவு செய்வதாகத் திட்டம் என்கிறார்கள்.