மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் காலயாக பூஜை மங்கல இசையுடன் தொடங்கி கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. பூர்ணாஹீதியுடன் முதல் கால யாக பூஜை நிறைவு பெற்று பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. மாலை இரண்டாம் கால யாக பூஜை தொடர்ந்து நடைபெற்றது. இன்று காலை மூன்றாம் கால யாக பூஜை உடன் தொடங்கி சிறப்பு யாகம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு அர்ச்சகர்கள் தீர்த்த குடங்களுடன் பெருமாள் சன்னதிக்கு வந்தனர்.

தொடர்ந்து வெங்கடேச பெருமாளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலக் கால் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து சென்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பூஜைகளை அர்ச்சகர்கள் சங்கரநாராயண சர்மா என்ற ஜெய்சங்கர் மற்றும் சங்கரநாராயணன் குழுவினர் செய்தனர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செயல் அலுவலர் ராஜா மற்றும் பூபதி வசந்த் கவிதா உள்ளிட்ட பணியாளர்கள் திருவிழா குழுவினர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.




