• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

லஞ்சம் வாங்கினால் அவ்வளவு தான்… தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் எச்சரிக்கை

ByP.Kavitha Kumar

Jan 24, 2025

தவெக மாவட்ட செயலாளர்கள் லஞ்சம் வாங்கக் கூடாது. அப்படி லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது .

இந்த கூட்டத்தில் தவெக கட்சிக்கு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது,

இந்த நிலையில் , தவெக மாவட்ட செயலாளர்கள் லஞ்சம் வாங்கக் கூடாது. அப்படி லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரிக்கை விடுத்தார்.

தவெகவில் பதவி வகிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய், தவெக மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.