குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் முன்னாள் திரைப்பட நடிகர் என்ற உணர்விலும் பாஜகவின் ஜனநாயகம் அற்ற நிலையையும் கண்டித்து தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாஜக – ஜனநாயகனுக்கு குரல் கொடுத்த விஜய் வசந்த்.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ் சினிமாவை நசுக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் அவமதிக்க வேண்டாம்” என அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக உரிமைகளுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் ஆதரவாக தனது குரலை எழுப்பியுள்ள அவர், மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.




