• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி ஊர்மீனவர்களின் கோரிக்கையை சொந்த செலவில் நிறைவேற்றி கொடுத்த விஜய் வசந்த்.

கன்னியாகுமரியில் கடற்கரை பகுதியில் மீனவர்கள் வள்ளம் மற்றும் சாதாரண படகுகள் நிறுத்தம் பகுதி மிகுந்த மேடு பள்ளம் மற்றும் செடிகள் நிறைந்த சில இடங்களில் புதர் மண்டி கிடந்தது.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட. ஜோசப் தெரு, அந்தோணியார் தெரு, சகாயமாதா தெரு பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடந்த வாரம். கன்னியாகுமரியில் தூண்டில் பாலம் சிதலமடைந்த பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் ஆய்வு செய்த போது, குறிப்பிட்ட மூன்று தெருவின் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க நாடாளுமன்றம் சென்ற நிலையிலும், கன்னியாகுமரியில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் மூலம். விஜய் வசந்த் அவரது சொந்த செலவில் ஜேசிபி மூலம் நிலத்தை சமப்படுத்தி மீனவர்களின் படகுகளை நிறுத்த அடிப்படையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.