ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்க தனி விமானத்தில் மதுரை புறப்பட்ட நடிகர் விஜய், ரசிகர்கள் – தொண்டர்கள் தன்னை பின்தொடர வேண்டாம் என்று பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் விஜய் மதுரையில் ஜனநாயகம் படத்திற்கு படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது செய்தியாளரிடம் கூறியதாவது..,
மதுரையில் உள்ள நண்பர்கள் நம்பிக்கைகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து, நடிகர் விஜய் மேலும் கொடைக்கானலில் நடைபெற இருக்கும் ஜனநாயகம் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மதுரை செல்ல இருப்பது தெரிவித்தார். மேலும், விரைவில் மதுரையில் கட்சி சார்பில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு மணி நேரத்தில் மதுரைக்கு வந்து விடுவேன் என்றும், அங்கு அனைவரையும் சந்தித்து விட்டு, எனது வேலையை பார்க்க சென்று விடுகிறேன். நீங்கள் அனைவரும் ஷேப்பாக அவரவர்கள் வீட்டிற்கு சென்று விடுங்கள் என்றும் தெரிவித்தார். மேலும் தன்னை பின் தொடர வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் தன்னை பின் தொடர வேண்டாம் என்றும், இருசக்கர வாகனத்தின் மீது ஏறி நின்று பின் தொடர வேண்டாம் என்றும், ஹெல்மெட் அணியாமல் செல்ல வேண்டாம் என்றும், நடிகர் விஜய் தெரிவித்தார். மேலும் இது போன்ற காட்சிகளை காண்பது மிகவும் வேதனையாக பதட்டமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் கூடிய விரைவில் அனைவரையும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறேன் என்றும் நடிகர் விஜய் தெரிவித்தார்.
மேலும் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் தெரிவித்து லவ் யூ ஆல் சி யூ ஆல் என்றும் தெரிவித்தார்.