• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விரக்தியின் வெறுப்பில் விஜய்ஆண்டனி வெளியிட்ட டிவிட்டர் பதிவு

நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உலகமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, உலகத்தை ஒரேயடியாக பாம் போட்டு அழித்து விட்டால் நன்றாக இருக்கும் என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்.

எவனாவது ஹிரோஷிமா நாகசாகியில் போட்ட மாதிரி, உலகத்தை ஒரேயடியாக பாம் போட்டு அழிச்சுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்’ என்று தெரிவித்துள்ளார்.இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.