• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் விறுவிறுப்பான வாக்கு பதிவு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலு காவில் அலுவலகத்தில் சோழவந் தான் சட்டமன்ற தொகுதியில் உள்ள 261 வாக்கு சாவடிகள் 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சாவடிகளில் 19 வாக்குச்சாவடிகள் பதட்டமானதாக குறிப்பிடப்பட்டுள்ள து.மொத்தவாக்காளர்கள் 2,12,502 ஆண்கள் 1,04,246 பெண்கள் 1,08,243 இரண்டாம்பாலினத்தவர்கள் 13, இராணுவவீர்கள் 617 உள்ளனர்.

இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் சிறு கோளாறு ஏற்பட்டு 15 நிமிடம் கால தாமதமாக வாக்கு பதிவு தொடங்கியது. மேலும் சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசன் காதகிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

அ.தி.மு.க வேட்பாளர் மாணிக்கம் மஸ்தான் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். தமிழக வெற்றிக்காக வேட்பாளர் கருப்பையா வாவிடமருதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார் . நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகலட்சுமி வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடந்து வருகிறது.