• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் சிறப்பாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி…

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து பச்சரிசியில் தமிழ் எழுத்துக்களை மோதிர விரலால் எழுத வைத்து எழுத்துக்களை அறிவித்தனர்.

விஜயதசமி தினத்தன்று கல்வி, தொழில் என எந்த காரியம் தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றியடையும் என்பது ஐதீகம். அதனடிப்படையில் சேலம் குரங்குச்சாவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு எழுத்துக்களை அறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து பச்சரிசியில் தமிழ் எழுத்துக்களை மோதிர விரலால் எழுத வைத்து எழுத்துக்களை அறிவித்தனர். தொடர்ந்து அனைவரும் ஐயப்பனை தரிசனம் செய்து சென்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமான எண்ணிக்கையை விட நடப்பாண்டு குறைந்தளவு குழந்தைகளே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.