• Thu. Mar 28th, 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம்..

Byகுமார்

Oct 15, 2021

தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கோவில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க கோவில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கோவில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று இன்று முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும் கோவில்களை திறக்க அரசு உத்தரவிட்டது.

அரசு அறிவிப்பின் படி, வெள்ளிக்கிழமையான இன்று கோவில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுக்குப் பின்னர் வார இறுதி நாளான வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பொதுமக்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

பெண்கள் கூறுகையில், கொரோனா தொற்றுக்கு பின்னர் வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால் அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்வது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது, மேலும் இந்தக் கொரோனா தெரற்று முழுமையாக நீங்கிட, உலக அமைதி பெறவும் சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *