• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வெளியானது “நாங்க வேற மாறி” வீடியோ பாடல்!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தில் ஹீமாகுரேஷி, கார்த்திகேயா, விஜே பானி, சுமித்ரா ஆகிய பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருந்தார். பின்னணி இசை ஜிப்ரான் அமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது.

வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 220 கோடி வசூல் செய்து பல சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில், வலிமை படத்தில் இடம்பெறுள்ள நாங்க வேற மாறி வீடியோ பாடல் தற்போது வெளியீடபட்டுள்ளது.