• Sun. Feb 9th, 2025

சிம்பு பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தக் லைஃப் படக்குழு

ByIyamadurai

Feb 3, 2025

சிம்பு பிறந்தநாளான இன்று அவர் நடித்த படத்தின்: சிறப்பு வீடியோவை தக் லைஃப் படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு என்ற சிலம்பரசன் தனது 42வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரைத்துறையினர், ரிசகர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிம்பு பிறந்தநாளை ஒட்டி, சிம்பு நடிக்கும் 49-வது படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த வரிசையில், தக் லைஃப் படக்குழு சார்பில் நடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தக் லைஃப் படத்தை தயாரித்துள்ள ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில், நடிகர் சிம்பு கையில் துப்பாக்கியுடன் அமர்ந்து இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. வீடியோ முடிவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் எஸ்டிஆர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிம்பு பிறந்த நாளையொட்டி அவர் நடித்த படம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.