அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் ரங்கசாமி சாலையில் காரை நிறுத்தி காரில் அமர்ந்தபடி, காலை உணவு சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எப்போதுமே எளிமையாக இருக்கக்கூடியவர், தான் முதலமைச்சர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களோடும் எளிமையாக பழகக்கூடியவர்.
குறிப்பாக சிறுவர்களோடு இணைந்து பொழுதுபோக்கு விளையாட்டு விளையாடுவது, டென்னிஸ் விளையாடுவது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் விசேஷ நாட்களில் முதலமைச்சர் ரங்கசாமி சாலையில் நடந்தே சென்று மக்களை சந்திப்பார். அப்போது கடைவீதிக்கு வரும் பொது மக்கள் முதலமைச்சருடன் கை குலுக்கி போட்டோ எடுத்து செல்வது செல்வது வழக்கம்.
இந்த வகையில் நேற்று கதிர்காமம் தொகுதியில் அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் ரங்கசாமி சாலையில் காரை நிறுத்தி விட்டு, காரில் அமர்ந்தபடியே காலை உணவையும் சாப்பிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.