மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் மிகவும் பிரிசித்தி பெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் 1.52 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் செய்வதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

பூமி பூஜையில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி துணைத் தலைவர் லதா கண்ணன் வார்டு கவுன்சிலர்கள் கொத்தாலம் செந்தில் வேல் குருசாமி செல்வராணி அறங்காவலர் குழு தலைவர் ராஜாங்கம் உறுப்பினர்கள் பெரியசாமி எஸ் எம் பாண்டி ஆண்டியப்பன் மங்கையர்கரசி செயற்பொறியாளர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி செயல் அலுவலர் தாரணி பணியாளர்கள் முரளிதரன் சிவசூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அர்ச்சகர் பார்த்தசாரதி தலைமையில் யாக பூஜை நடைபெற்றது தொடர்ந்து ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் வெங்கடேசன் எம் எல் ஏ வுக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஜெனகை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் இளமதி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன் இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் பூபதி முன்னாள் கவுன்சிலர் சௌந்தரபாண்டி திமுக நிர்வாகிகள் மாரிமுத்து சசிகலா சக்கரவர்த்தி முன்னாள் பேரூராட்சி பணியாளர் பிச்சை முத்து கண்ணன் மொபைல் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.